மதுரை செயின்ட் மேரீஸ் மேனிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!
மதுரை மே 11
மதுரை செயின்ட் மேரீஸ் மேனிலைப்பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியுற்ற சந்திப்பு நிகழ்ச்சி இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சைமன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இப்பள்ளியில் கடந்த 1975 -76 ஆம் ஆண்டு பேட்ஜில் பயின்ற மாணவர்கள் அரசுத்துறைகளில் பல்வேறு உயர்ந்த நிலையில் அதிகாரிகளாகவும் அரசு பணியாளர்களாகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையிலும் இதில் சிலர் பிரபல தொழில் அதிபர்களாகவும்
உள்ளனர் என்பதை
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அடையாளப் படுத்திக் கொண்டனர்.
மேலும்
இவ்விழாவில் பங்கேற்க வருகை புரிந்த 50 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று பள்ளியில் பயின்ற அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மலர்ந்த முகத்துடன் சந்தோசங்களை பரிமாறிக் கொண்டு அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஓய்வு பெற்ற நீதிபதி
ஜான் சந்தோசம்,
முருகன் இட்லி கடை அதிபர் மனோகரன்,
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஓய்வு
முத்துத்துறை,
மற்றும் பிரபல ஆடிட்டர்கள் சண்முகசுந்தரம், மனோகரன்,
ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மேலாளர் ஓய்வு
சா.ஆப்ரஹாம் லெஸ்லி,
கண்ணன்,
தர்மசீலன்,
கமலக்கண்ணன், இருதயராஜ்
ஆகியோர்
சிறப்பாக செய்திருந்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.
