உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை மக்களுக்கு பாதுகாப்பு மிக்க விழாவாக நடத்திட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் : டாக்டர் சரவணன் வேண்டுகோள்

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை மக்களுக்கு பாதுகாப்பு மிக்க விழாவாக நடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா‌.சரவணன் வேண்டுகோள்

மதுரை ஏப்

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை மக்களுக்கு பாதுகாப்பு மிக்க விழாவாக நடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என
அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மதுரையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 28 ம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி திருத்தேர் நிகழ்ச்சியும், மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது .

தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது .இந்தச் சூழ்நிலையில் திருவிழாவை காண தென் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் வருவார்கள். ஆகவே மக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள்,குடிநீர், வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆற்றில் விரும்பத்தகாத நிகழ்ச்சி நடைபெற்றது ஆகவே போதுமான அளவில் காவல்துறையினரை அமைத்திட வேண்டும். குறிப்பாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்ய வேண்டும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா மக்களுக்கு பாதுகாப்பு உள்ள திருவிழாவாக அமைய மதுரை மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *