புனித ரமலானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக சிறப்புத் தொழுகை

புனித ரமலானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக சிறப்புத் தொழுகை

மதுரை மார்ச்

ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டது.
இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.


ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.


இந்நிலையில் புனித ரமலானை முன்னிட்டு, மதுரை அரசரடி யூ.சி பள்ளி மைதானத்தில், “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக, மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் “ஷேக் இப்ராகிம்” அவர்களின் தலைமையில் நடந்த பெருநாள் திடல் சிறப்புத் தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகள் கலந்து கொண்டு உலக அமைதிக்காகவும், இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும் அல்லாவை பிரார்த்தனை செய்தனர்.


இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாவட்டச் செயலாளர் அபூபக்கர் அர்சத் அல்புஹாரி அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.


இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *