எடப்பாடியார் தலைமையிலான மக்கள் அணிக்கும் ,ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அணிக்கும் தான் போட்டி.. டாக்டர் சரவணன் கடும் தாக்கு…!

எடப்பாடியார் தலைமையான மக்கள் அணிக்கும் ,ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அணிக்கும் தான் போட்டி..

20/20 கிரிக்கெட் மேட்ச் போல தமிழக அணிக்கும், டெல்லி அணிக்கும் நடைபெறும் போட்டி அல்ல

திமுகவின் ஐந்தாண்டு கால சாதனை அல்ல வேதனை தான் அதிகம் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஸ்டாலின் மீது கடும் தாக்கு

மதுரை மார்ச் 19

2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் எங்கு பார்த்தாலும் தமிழக அணைக்கும், டெல்லி அணிக்கும் தான் போட்டி என்று கூறுகிறார். 20 /20 கிரிக்கெட் மேட்ச் போல தமிழக அணிக்கும், டெல்லி அணிக்கும் நடைபெறும் போட்டி அல்ல! கிரிக்கெட் போட்டிக்கு அணிகளை விலைக்கு வாங்குவது பல இன்றைக்கு
கட்சிகளை ஸ்டாலின் விலைக்கு வாங்குகிறார் .

எடப்பாடியார் தலைமையான தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்கள் அணிக்கும், ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அணிக்கும்தான் போட்டி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் . கடந்த ஐந்து ஆண்டுகளில் சாதனைகளை விட வேதனைகள் தான் அதிகம்.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டுக்கு 300 கோடி அளவில் விளம்பரத்திற்காக செலவிட்டார்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் செலவழித்த விளம்பர பணத்தை கூட வைத்துக் கூட 100 ரூபாய் கேஸ் மானியம் மக்களுக்கு கொடுத்திருக்கலாம் மக்கள் நலனை காட்டிலும் விளம்பர மோகத்தில் ஸ்டாலின் திகழ்ந்து வந்தார் .

இந்த ஐந்தாண்டு கால திமுகவின் சாதனை என்று பார்த்தால் 40 ஆயிரம் போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ‌இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. பெண் சாபம் பொல்லாதது அன்றைக்கு கண்ணகி நீதி கேட்டு மதுரையை எரித்தார் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் வடிக்கும் கண்ணீர் திமுகவை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நிலை உருவாகும்.

இந்த ஐந்த ஆண்டுகளில்4 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். அதேபோல கனிமவளங்கள் 50 சதவீதம் சுரண்டப்பட்டுள்ளது .
5 லட்சம் கோடியை கூடுதலாக கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு கோடிக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டை இழுத்து அதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை கோடி முதலீட்டை ஈர்த்து உள்ளீர்கள் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டால் வெள்ளை பேப்பரை காண்பிக்கிறார் அதிபுத்திசாலி அமைச்சர்.

தற்பொழுது 22 கூட்டணியை ஸ்டாலின் அமைத்துள்ளார் தமிழகத்தில் உள்ள அனைத்து லேட்டர் பேடு கட்சிகளையும் கூட்டணி வைத்தாலும் ஸ்டாலின் ஆட்சிக்கு வர முடியாது ஏனென்றால் இன்றைக்கு எடப்பாடியார் தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி வலுவான கூட்டணி உள்ளது

2026 சட்டமன்றத் தேர்தல் என்பது மகாபாரத யுத்தத்தை போல எடப்பாடியார் தலைமையிலான தர்மர் அணிக்கும், ஸ்டாலின் தலைமையிலான துரியோதனன் அணிக்கும்தான் போட்டி. இறுதியில் தர்மம் வென்றதை போல எடப்பாடியார் வென்று மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *