மதுரை விளாங்குடியில் அதிமுக மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் நாகஜோதி சுப்புரத்தினம் தலைமையில் விளையாட்டு போட்டிகள்..!

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை விளாங்குடியில் அதிமுக மகளிரணி மாவட்ட துணைச்செயலாளர் நாகஜோதி சுப்புரத்தினம் தலைமையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மதுரை பிப்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி சார்பாக மாவட்ட மகளிரணி செயலாளர் சுகந்தி அசோக் முன்னிலையில், மகளிரணி மாவட்ட துணைச் செயலாளர் நாகஜோதி சுப்புரத்தினம் தலைமையில், விளாங்குடி வருமானவரி காலனியில் நடந்த மகளிர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கோலப்போட்டி, பானை உடைத்தல் போட்டி, மியூசிக் சேர், பேச்சுப்போட்டி, சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் விளாங்குடி கே.ஆர்.சித்தன், வி.பி.ஆர்.செல்வகுமார், எம்.ஜி.ராமச்சந்திரன்,கே.வி.கே.கண்ணன், ஜோசப்தனிஸ்லாஸ், பி.என்.சுந்தர்ராஜன், சி.கேசவன், ஐ.டி.விங் துணைச் செயலாளர் விளாங்குடி கந்தன், ஆனந்த், செல்வம் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஷோபியா பிச்சைமணி,வி.ஜெயபாரதி, மகேஸ்வரி, நாகலெட்சுமி, காந்திமதி, சாந்தி, ஜெயபாக்கியம், கார்த்திகைச்செல்வி, சர்மிளா,மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *