சேலத்தில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி தலைமை அலுவலகம் திறப்பு விழா..!

சேலம் அம்மாபேட்டையில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் தமிழக நாயுடு பேரவை மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பி.குணசேகரன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில செயலாளர் சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜபாண்டி, மாநில அமைப்பு செயலாளர்கள் ஈஸ்வரன், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநகர தலைவர் கண்ணன், சேலம் மாவட்ட அவைத் தலைவர் குமரவேல், தமிழக நாயுடு பேரவை மாநில இளைஞரணி தர்மன், கரூர் ஜெயபிரகாஷ், ஈரோடு பன்னீர், மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா, திண்டுக்கல் கஸ்தூரிராஜா, கடலூர் குமார், நாமக்கல் சிட்டிபாபு கோவை புருஷோத்தமன் திருச்சி பாபு, திருப்பூர் கேஎம் மூர்த்தி, நெய்வேலி சீனிவாசன், ஆத்தூர் கிழக்கு மாவட்டம் செல்வராஜ், சிவாஜி, மதுரை ரங்கராஜ், தமிழ்நாடு தெலுங்கு சமுதாய வழக்கறிஞர் வைகை ஆனந்த், இந்திய நாடார் சமுதாய ஒருங்கிணைப்பாளர் தலைவர் மாதேஸ்வரன், அகமுடையார் கூட்டமைப்பு தலைவர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் தமிழக நாயுடு பேரவை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கலாம் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *