முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய டாக்டர் சரவணன்…!

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரிப்பாளையம் ஜம்புரோபுரம்‌ மார்கெட், தத்தனேரி பாக்கியநாதபுரம் ஆகிய இடங்களில் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இந்த விழாக்களில் கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் ஆட்சி அமைந்திட அயராது உழைத்திட வேண்டும் எனவும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளின் சிறப்புகளையும் பொதுமக்களிடத்தில் விளக்கி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் 28 வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி.கே.பாலு, வட்ட நிர்வாகிகள் பரமசிவன், குமரேசன், கண்ணன், முடக்காத்தன் மணி, மனோ, வேல்முருகன், பாக்கியநாதபுரம் அதிமுக நிர்வாகிகள் விருமாண்டி, முத்துபாண்டி, வைகைபாலன், முத்துவேல்ராஜன், திலீப் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் பாண்டிச்செல்வி, சிந்துஜா, ஜானகி, சீனிதங்கம், பிரியாங்கா, முனீஸ்வரி பா‌ஜக நிர்வாகிகள் பாண்டிலட்சுமி, மாசாணம், தவசி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *