இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் கைவினை கலைஞர்கள் சர்வீஸ் சென்டர்,பெட்கிராட் எம்ப்ராய்டரி ப்ரொட்யூசர் கம்பெனி இணைந்து நடத்திய மேம்பாட்டு கருத்தரங்கம்

இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் கைவினை கலைஞர்கள் சர்வீஸ் சென்டர்,பெட்கிராட் எம்ப்ராய்டரி ப்ரொட்யூசர் கம்பெனி இணைந்து நடத்திய மேம்பாட்டு கருத்தரங்கம்

மதுரை பிப்

இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் கைவினை கலைஞர்கள் சர்வீஸ் சென்டர் பெட்கிராட் எம்ப்ராய்டரி ப்ரொட்யூசர் கம்பெனி இணைந்து மேம்பாட்டு கருத்தரங்கம் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமையிலும் தலைவர் கிருஷ்ணவேணி பொருளாளர் சாராள்ரூபி, துணைத்தலைவர் குணசீலி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.


கைவினை கலைஞர்கள் சர்வீஸ் சென்டர் நாகர்கோவில் உதவி இயக்குனர் வீணா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கைவினை கலைஞர்களது வாழ்வாதாரம் உயர தேவையான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பயிற்சியைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என பேசினார்.

கதர் கிராம தொழில் ஆணையம் மண்டல இயக்குனர் செந்தில் ராமசாமி பேசுகையில், சிறு தொழில்கள் துவக்க பெண்கள் முன் வர வேண்டும். அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி பேசுகையில், பெண்கள் பாதுகாப்பு பணி செய்யுமிடங்களில் சமுக நல துறையுடன் இணைந்து பெண் பாதுகாப்பு மையங்கள் துவக்க வேண்டும் -பல்வேறு இலவச பயிற்சிகளை பெண்கள் முன்னேறத்திற்காக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம் என பேசினார்.

தாட்கோ மாவட்ட அலுவலர் செலினா – அரசு திட்டங்களையும் சலுகைகளையும் -மானியத்துடன் கடன் வாங்கி தொழில் துவங்கலாம் எனவும் சவுத் இந்தியன் வங்கி நிதிசார்பு அலுவலர் மீனாட்சி சுந்தரி வங்கி சேவைகள் ஆன்லைன் விற்பனை பற்றி விளக்கி பேசினார்.
கருத்தரங்கில் 20 தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இத்திட்டம் தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும்.

கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *