திமுக ஆட்சியில் ஒன்றரை கோடி இளைஞர்கள் மதுவால் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியது திமுக அரசு
அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் உதயநிதிக்கு பதிலடி
மதுரை பிப்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவி அம்மாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு,கழக மருத்துவரணி சார்பில், தொடர் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது .இதனை தொடங்கி வைத்த அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறியதாவது :
தற்போது கோ.புதூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சீமான் நகர், அழகர் கோவில் சாலை, செல்லூர், பந்தல்குடி, அண்ணாநகர், பாக்கியநாதபுரம் ஆகிய இடங்களில் தொடர் மருத்துவ முகாம் நடைபெறும். இதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறும்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக விழாவில், திமுகவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து உள்ளோம் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளோம் என்று தம்பட்டம் அடித்துள்ளார். ஆனால் திமுக ஆட்சியில் இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை மறைத்துவிட்டு பேசியுள்ளார்.
2021 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் மூலம் வேலை வாய்ப்பு வழங்கி ஐந்தாண்டுகளில் 50 லட்சம் இளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறினீர்கள். எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளீர்கள் என்பதை கூட வெளியிடவில்லை.
ஒருவேளை 50 லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்ப்பதை தான் வேலை வாய்ப்பு என்று மறந்துவிட்டு கூறுகிறீர்களா..?
2021 திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களில் நிரப்புவோம், என்றெல்லாம் வாக்குறுதிகளை இளைஞர்களுக்கு கொடுத்தார்கள் ஆனால் இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்யாததால் இதுவரை 25 மாணவர்கள் தங்கள் உயிரை வைத்துக் கொண்டார்கள்.
அதேபோல தமிழகத்தில் மாணவர்கள் வாங்கி கல்வி கடன் 17,000 கோடி உள்ளது. இதுவரை ஒரு நையாபைசா கூட செலுத்தவில்லை. டாஸ்மார்க் வருமானத்தின் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வருகிறது அந்த பணத்தில் இருந்து கூட வழங்கலாம். இன்றைக்கு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால் ஒன்றரை கோடி இளைஞர்கள் அடைந்துள்ளனர்.
இந்த 5 ஆண்டுகளில் 10 லட்சத்து,
62 ஆயிரம் கோடி அளவில் முதலீட்டை ஈர்த்து உள்ளோம் இதன் மூலம் 32 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் இதில் ஒரு லட்சம் கோடி கூட தொழில் சாலைகள் உருவாகவில்லை. இன்றைக்கு தொழிற்சாலையில் எல்லாம் தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா நோக்கி நகர்கிறது.
ஆனால் அம்மாவின் ஆட்சி காலத்தில் முதலீட்டார் மாநாடு நடத்தப்பட்டு இரண்டு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சி காலத்தில் 3 லட்சம் கோடி அளவில் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டது இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று ஸ்டாலின் கூறினார் இதுவரை 68,000 பேருக்கு தான் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.
அதேபோல உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட்டதை குறித்து பெருமையாக பேசி உள்ளார்.இது திமுகவின் சாதனையாக கூறுகிறார். திமுக ஆட்சி பொறுப்பு இருக்கும்போது தமிழகத்தின் கடன் சுமை நான்கரை லட்சம் கோடி தான் ஆனால் தற்போது திமுக ஆட்சியின் 5 ஆண்டுகால கடன் சுமை பத்தரை லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஏறத்தாழ 6 லட்சம் கோடி அளவில் கடனை வாங்கி உள்ளனர்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது அப்போது நிதி அமைச்சராக இருந்த
பி.டி.ஆர். தியாகராஜன் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழகத்தின் கடன் அளவில் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்து 63 ஆயிரம் கடன் சுமை உள்ளதாக தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 2.27 கோடி ரேஷன் கார்டு உள்ளது. இதைக் கணக்கிட்டால் ஒரு குடும்பத்தின் கடன் சுமை 4.66 லட்சம் உள்ளது ஏறத்தாழ ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சம் அளவில் கடன் சுமையை திமுக அரசு உயர்த்தி உள்ளது.
இன்றைக்கு 1.31 கோடி குடும்ப பெண்களுக்கு ரூ.5000 வழங்கி விட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் 2.27 லட்சம் குடும்பங்களுக்கு இரண்டு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் கடன் சுமையை தலையில் விட்டனர். இந்த கடன் சுமை எப்படி வந்தது.இன்றைக்கு ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டார்கள். ஆகவே திமுகவின் ஊழலை மறைக்க ,நிர்வாக சீர்கேட்டை மறைக்க, மக்களை திசை திருப்ப ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எந்த சித்து வேலை செய்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில்மக்கள் மத்தியில் எடுபடாது. 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தான் முதலமைச்சர் என இப்போதே மக்கள் தீர்ப்பு எழுத தயாராகி விட்டார்கள் என கூறினார்.
