மதுரையில் மனிதம் அமைப்பு சார்பில் ரம்ஜான் நிவாரணம் வழங்கும் விழா.!

மதுரையில் மனிதம் அமைப்பு சார்பில் ரம்ஜான் நிவாரணம் வழங்கும் விழா

மதுரை பிப்

இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதம் துவங்கவுள்ளதை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில், மனிதம் அமைப்பு சார்பாக, ரமலான் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கோரிப்பாளையம் தர்ஹா மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 50 குடும்பங்களுக்கு ரமலான் மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் ரமலான் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஜெயின் அலாவுதீன் தலைமை வகித்தார். கோரிப்பாளையம் தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி பாசில் பாட்ஷா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஜாகீர் உசேன், ரியாஸ் மஹால் அசன்பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தர்ஹா டிரஸ்டிகள் சலீம், சையது ரஃபீக் உட்பட அப்துல் பாய்,சையது உசேன், யாசின், வடமலையான் சையத் அபுதாகீர், சுல்தான் டெய்லர், பசுமை நண்பர்கள் சிராஜ்,பாட்ஷா மற்றும் நியாஸ் பாய்,சஃபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மனிதம் அமைப்பின் நிர்வாகிகள் அப்பாஸ்,பிலால்,யாசர்,ஃபரீத்,பயாஸ்,சையது, சித்திக்பாய், சீனிவாசன், ஆஷிக், அலாவுதீன், புதூர் பாட்ஷா,நைனா (எ) பாலமுருகன், பாண்டி, சாதிக் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *