பரவை பேரூராட்சியில், புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையத்தை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

பரவை பேரூராட்சியில், புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையத்தை, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

மதுரை பிப்

தமிழக முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ அவர்கள், மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மதுரை மாவட்டம் ஊர்மெச்சிகுளத்தில், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக மையம் மற்றும் பரவை பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை முன்னாள் அமைச்சரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். மேலும் புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஜெயந்தி ராஜூ, பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் கலாமீனாராஜா, மற்றும் நிர்வாகிகள் பரவை பேரூர் கழகச் செயலாளர் பரவை ராஜா, வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, பா.குமார், சக்திவிநாயகர் பாண்டியன், திரவியம், பேராசிரியர் உசிலை ஜெயபால், வி.பி.ஆர் செல்வகுமார், நீதிகாந்த், மார்க்கெட் செந்தில்குமார், கே.எஸ்.சுப்பு, மார்க்கெட் மார்நாடு மற்றும் பரவை பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *