தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆணைக்கிணங்க
வடக்கு 2- ம் பகுதி அ.தி.மு.க.செயலாளர் வி.கணேசன் தலைமையில்
ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பு
மதுரை, மார்ச் 02-
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க வடக்கு 2-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளர் வி.கணேசன் தலைமையில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க வடக்கு 2- ம் பகுதி அ.தி.மு.க.செயலாளர் வி.கணேசன் தலைமையில் வடக்கு பகுதிக்குட்ட பகுதி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், அணி நிர்வாகிகள், நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிக்கணக்கானோர் மினிபஸ், ஷேர் ஆட்டோ, லோடு ஆட்டோ, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் நரிமேடு புலித்தேவன் தெரு பகுதியில் இருந்து மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கு உணவு, பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வடக்கு 2- ம் பகுதி செயலாளர் வி.கணேசன் சிறப்பாக செய்திருந்தார்.
இதில் பகுதி தலைவர் எஸ்.முருகன், பிரதிநிதி முத்துகுமார், துணை செயலாளர் பாண்டிச்செல்வம், பாசறை பகுதி செயலாளர் தினேஷ்குமார், ஐ.டி.விங் எஸ்.சுரேஷ், பகுதி பொருளாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டி, மகளிரணி ஜெயா, பேரவை செயலாளர் ரவி, மாணவரணி செல்வபாண்டி மற்றும் வட்ட செயலாளர்கள் 32 வடக்கு வட்ட செயலாளர் பீ.பீகுளம் மகேந்திரன், 32-வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.ஜி.ஆர். ஹோட்டல் கண்ணன், 26 வது கிழக்கு வட்ட செயலாளர் வேல்மணி, 15-வது வடக்கு வட்ட செயலாளர் பாண்டித்துரை, 15-வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
