விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கி இளைஞர்கள் வாழ்வில் வளம் சேர்த்தவர் எடப்பாடியார்
விளையாட்டு வீரர்களையும், இளைஞர்களின் ஏமாற்றிய அரசு திமுக அரசு
அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
மதுரை மார்ச் 06
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீபி குளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நடத்திய கபாடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில மருத்துரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ரொக்கப் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் பீபிகுளம் காசிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு விழாவில் பீபிகுளம் கணேசன், வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தம், அஜித்குமார் உள்பட கபடி வீரர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
பின்னர் டாக்டர் சரவணன் கூறியதாவது:-
விளையாட்டு வீரர்களுக்கு பொற்கால ஆட்சியாக அம்மாவின் அரசு இருந்தது குறிப்பாக கிராமங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவில், மாநில அளவில் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்கப்பட்டன
விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சகவீத இட ஒதுக்கீட்டினை
எடப்பாடியார் அறிவித்து அதை செயல்படுத்தினார் .
அதேபோல மாணவர்களுக்கு மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் கடந்த பத்தாண்டுகள் அம்மாவின் ஆட்சியில் வழங்கப்பட்டது வழங்கப்பட்டது. இதன் மூலம் 53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றார்கள். அதேபோல கொரோனா காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஆல் பாஸ் அறிவித்தார் அதன் மூலம் ஆல் பாஸ் முதல்வர் என்று மாணவர்கள் எடப்பாடியாருக்கு புகழாரம் சூட்டினார் அதே போல கொரோனா காலங்களில் 9 லட்சம் மேற்பட்ட மாணவர்களுக்கு 2ஜி இலவச டேட்டாவை வழங்கினார்
தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு ஊக்கத்தொகையை எடப்பாடியார் உயர்த்தி வழங்கி வந்தார் குறிப்பாக இளைஞர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பொற்கால ஆட்சியாக எடப்பாடியார் ஆட்சி இருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை பறித்து விட்டனர் .தற்போது ஆட்சி முடியும் தருவாயில் தேர்தலுக்காக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவோம் என்று கூறுகிறார்கள் இது எல்லாம் மாணவர்களை ஏமாற்றும் செயலாகும்.
2021 தேர்தல் அறிக்கையில் திமுக ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் மூலம் வேலை வாய்ப்பு வழங்கி ஐந்தாண்டுகளில் 50 லட்சம் இளைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று கூறினீர்கள் அதை செய்தீர்களா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், என்று கூறினீர்கள் அதில் ரத்து செய்யவில்லை இதனால் 25 மாணவர்கள் பலியாகியுள்ளனர்
மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம், என்று கூறினீர்கள் ஒரு பைசா கூட ரத்து செய்யவில்லை
ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம், என்று கூறியுள்ளீர்கள் இதுவரை 68,000 நபர்களைத்தான் நியமித்து உள்ளாகள்
தொழில் முதலீட்டு மாநாட்டில் 12 லட்சம் கோடியை ஈர்த்துள்ளோம் அதில் 36 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது என்று கூறுகிறீர்கள் இதில் ஒரு லட்சம் கோடி அளவில் கூட தொழில் முதலீட்டை தமிழகம் தொடங்கவில்லை
ஆனால் அம்மாவின் ஆட்சி காலத்திலும் ,எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் 5. 50 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து இதன் மூலம் 20 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமும் வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்தோம்.
தற்போது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு விளையாட்டின் போது மாடுபிடி வீரர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை ரூ.2 லட்சம் வழங்கப்படும், மாணவர் வாங்கிய கல்வி கடன் ரத்து செய்யப்படும்
அதேபோல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நீண்ட நாள் காத்திருக்கும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு 2000 ரூபாயும், பிளஸ் டூ படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்
நிச்சயம் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள அனைத்தையும் நிச்சயம் இளைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் வழங்குவார் என கூறினார்.
