மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ கூடல்நகர் விளாங்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம்

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ கூடல்நகர் விளாங்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம்

பொதுமக்கள் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை ஏப்

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பாக நான்காவது முறையாக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்கள், கூடல்நகர், விளாங்குடி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, மேற்கு தொகுதியில் தான் செய்த திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அவருக்கு பகுதி கழகச் செயலாளர் விளாங்குடி கே.ஆர் சித்தன் மற்றும் 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன் ஆகியோர் தலைமையில் மலர் தூவியும் ஆளுயர மாலை அணிவித்தும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் பொதுமக்களிடையே வேட்பாளர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில்,

15 வருடமாக சட்டமன்ற உறுப்பினராகவும், அதில் 10 வருடமாக அமைச்சராக இருந்து இப்பகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். எனவே எனது பணி தொடர எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக முல்லைப் பெரியாறிலிருந்து 24 மணி நேரமும் தண்ணீர் வரும் விதமாக குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன் ஆனால் திமுக ஆட்சியில் இத்திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் இரண்டு மணி நேரம் மட்டுமே தண்ணீர் சப்ளை தருகின்றனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 24 மணி நேரமும் குடிநீர் வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பேன்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம். தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறுத்தி விட்டது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

எடப்பாடியார் அருமையான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அதுதான் இத்தேர்தலில் கதாநாயகன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 10-ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசம். அனைவருக்கும் பிரிட்ஜ் வழங்கப்படும்.

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். முதியோர்களுக்கு 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். மகளிர்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும். அரசு பேருந்துகளில் இனி ஆண்களுக்கும் இலவச பயணம். இப்படி அருமையான திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளார்.எனவே மீண்டும் உங்களுக்கு பணி செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள் என பேசினார்.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் எம்.எஸ் பாண்டியன், பேராசிரியர் உசிலை ஜெயபால், கணேஷ் பிரபு, வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும் வட்டக்கழகச் செயலாளர்கள் ஜஸ்டிஸ் ராஜா, சுந்தர்ராஜன், கேசவன், மலைச்சாமி, விஜயகுமார், நாராயணன் மற்றும் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *