மதுரை மாவட்டம் திருமால் கிராமத்தில் உள்ள கல்குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன்
மதுரை ஏப்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அடுத்த திருமால் கிராமத்தில் ஏற்கனவே குவாரி செயல்படும் நிலையில், மேலும் 3 குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த குவாரிகளில் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு வருவதால் கிராமங்கள் அணியக்கூடிய நிலையில் உள்ளது என்றும். உடனடியாக குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி ,திருமால் கிராமத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட தங்களது அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாவிட்டால் எங்களது அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என கிராம மக்கள் அறிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமால் கிராம மக்களுடன் மதுரை வடக்கு தாலுகா வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மக்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அதிமுக ஆட்சி அமைந்த உடன் கோரி உரிமத்தை முழுமையாக ரத்து செய்வேன் என உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள். கோ.தளபதி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் எங்கள் கிராமங்களில் இயற்கை வளங்கள் அழித்து விடுவார். கிராம மக்கள் நாங்கள் காட்டை, வீட்டை இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடுவோம் அதனால் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீதிவீதியாக கொடுத்தனர். அதோடு மருத்துவர் சரவணன் ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்
மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதி தனக்கு சொந்தமான குவாரியை சக்திவேல் என்பவருக்கு
குத்தகைக்கு விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
