மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.பா.சரவணனுக்கு ஆதரவாக ஸ்ரீதர் வாண்டையார்புதூர்,ஆத்திக்குளம் பகுதியில் தீவிர பிரச்சாரம்.

மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர்.பா.சரவணனுக்கு ஆதரவாக ஸ்ரீதர் வாண்டையார்
புதூர்,ஆத்திக்குளம் பகுதியில் தீவிர பிரச்சாரம்.

மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி முதல் பிரச்சாரத்தை துவக்கிய டாக்டர் சரவணன் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில் வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக நேற்று மாலை மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி புதூர் ஆத்திகுளம் பகுதியில் மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,


இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக வடக்கு 2-ஆம் பகுதி கழக செயலாளர் கணேசன், வட்டக்கழக செயலாளர்கள் சிவா, பாண்டித்துரை, பீ.பீ.குளம் மகேந்திரன், முத்துக்குமார், வேல்மணி, எம்ஜிஆர் ஹோட்டல் கண்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்,

பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் பேசுகையில்,எடப்பாடியார் முதல்வராக இருக்கும் போது ஒரு நல்ல முன்னேற்றத்தை தமிழ்நாட்டில் பார்த்தோம். மக்களுக்கு பாதுகாப்பு வேணும் நல்லா வாழ்வாதாரம் வேண்டும் நிம்மதியான தூக்கம் வேண்டும் நம் மக்களுடைய நம்ம பசங்களுடைய எதிர்காலம் வேண்டும் இதை அதிமுக மட்டுமே நமக்கு கொடுக்கும்
அதிமுக தேர்தல் அறிக்கையில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.

அதிமுக வெற்றிபெற்று எடப்பாடியார் முதல்வரானதும் பத்தாயிரம் ரூபாய் உங்கள் அக்கவுண்டில் ஏறும். தேர்தல் அறிக்கை சொன்ன அனைத்துமே உங்களுக்கு உடனே கிடைக்கும்‌ என எடப்பாடியார் சொல்லி உள்ளார்.

பேருந்தில் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் இலவச பயணம் என்று சொல்லியுள்ளார் என அதிமுக வின் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *