சட்டமன்ற தேர்தலில்
எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என
அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல்மூர்த்தி அறிவித்துள்ளார்.
மதுரை ஏப்.-17
மதுரையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் தலைவர் ஆபேல்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆபேல்மூர்த்தி பேசியதாவது:-
அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் அரசியல் சார்பற்ற ஒரு சங்கமாகும். எங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா, சீமான், விஜய் ஆகியோர் மீது எந்த வெறுப்பும் இல்லை. அனைவர் மீதும் அன்பு வைத்துள்ளோம். தேர்தலில் எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
ஆனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அது அவர்களுடைய விருப்பம். ஆனால் விவசாயிகள் பணம் வாங்கி வாக்களிக்க கூடாது. தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விவசாயிகளை அரசியல் கட்சிகள் வஞ்சிக்க வேண்டாம்.
மேலும் அவர் பேசுகையில் :- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் “அய்யப்பன்” என்பவருக்கு மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளோம். அதுவும் அவர் சார்ந்திருக்கும் கட்சிக்காக அல்ல.. அவர் ஒரு நல்ல மனிதர் என்பதற்காக அவருக்கு மட்டும் எங்கள் சங்கத்தின் சார்பாக ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
