திமுக பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறது , நான் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன்.
டாக்டர் சரவணன்
தராசு போல அதிமுக – திமுகவை மக்கள் நிறுத்தி பார்த்து வாக்களிக்க வேண்டும். வாக்குக்காக 1,500 பணம் வாங்குவதால் நாள் ஒன்றுக்கு 82 பைசாவுக்காக விலை போக வேண்டுமா?, கோ.தளபதி பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார், நான் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறார். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என டாக்டர் பா.சரவணன் கூறினார்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணன், நடிகர்கள் ரவி மரியா, கஞ்சா கருப்பு ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது டாக்டர் பா.சரவணன் பேசுகையில் “அதிமுகவின் வெற்றி வேட்பாளராக மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்.
திமுக 2021 ல் 505 வாக்குறுதிகளை வழங்கியது, ஆனால், 15 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவுற்றியது, நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அரசியல் செய்தது. ஆனால், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 7.5 சதவீத திட்டத்தால் 3600 மருத்துவ மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர், அதிமுக சாமானிய மக்களுக்கான வாக்குறுதிகளை தந்துள்ளது, திமுக ஆட்சியில் மக்களுக்கான வரியும், கட்டணமும் உயர்ந்துள்ளது. வண்டியூர் பூங்காவில் எம்.எல்.ஏ தளபதி பினாமி பெயரில் கட்டணம் வசூல் செய்கிறார்,
மதுரை வடக்கு தொகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றவில்லை. மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலகட்டத்தில் மட்டுமே திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சியில் கலைஞர் நூலகம், ஜல்லிகட்டு மைதானம் ஆகியவை மட்டுமே கொண்டு வரப்பட்டது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படும், திமுக வேட்பாளர் தளபதி 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வரவேயில்லை. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வாக்குக்கு 1,500 கொடுக்கிறார்.
கோ.தளபதி திருமங்கலம் பகுதியில் குவாரிகளை நடத்தி இயற்கை வளங்களை அழித்து வருகிறார். கோ.தளபதி தனது மகன் துரை.கோபால்சாமி பெயரில் குவாரி நடத்துகிறார். நான் வடக்கு தொகுதியில் மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்கிறேன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய போகிறது, ஆகவே, வடக்கு தொகுதி மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும்,
இதனால் வடக்கு தொகுதி வளர்ச்சி பெறும், வடக்கு தொகுதி வாக்காளர்கள் பணமா! குணமா! என பார்த்து வாக்களிக்க வேண்டும், திமுக கொடுக்கும் பணத்திற்க்காக மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது, தராசு போல அதிமுக – திமுகவை மக்கள் நிறுத்தி பார்த்து வாக்களிக்க வேண்டும். அதிமுக அரசு அறிவித்த திட்டங்களும், வடக்கு தொகுதி மக்களுக்காக நான் அறிவித்த திட்டங்களும் செயல்படுத்தப்படும், மேலும், வடக்கு தொகுதி மக்களுக்காக சிறப்பு நிதி பெற்று திட்டங்களை நிறைவேற்றுவேன்.
வடக்கு தொகுதியில் திமுக மக்களை விலைபேசி பணம் அளித்து வருகிறார்கள். வாக்குக்காக 1,500 பணம் வாங்குவதால் நாள் ஒன்றுக்கு 82 பைசாவுக்காக விலை போக வேண்டுமா?, கோ.தளபதி பணத்தை நம்பி தேர்தலில் நிற்கிறார், நான் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறேன் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என பேசினார்.
