மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண்டுக்கு இருமுறை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதூர் காந்திபுரம் கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்
மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் உறுதி
மதுரை
மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் அந்தனேரி, மருதங்குளம், ஜவஹர்லால் புரம், சூர்யா நகர், கொடிக்குளம், இபி காலனி, புதூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அவருடன் வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கே.பி.மீனாட்சி சுந்தரேஸ்வரர்,
அண்ணாதுரை, பகுதி கழகச் செயலாளர் கே.வி. கே .கண்ணன் வட்டக் கழக செயலாளர்கள் கார்த்திகேயன், கருப்புசாமி, மாரி ஆனந்தப்பன், ஆசை பாண்டி, வெங்கடேஷ், சபரி பாண்டியன் உட்பட கலந்து கொண்டனர்.
டாக்டர் சரவணன் பேசியதாவது
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு போட்டி உள்ளது .இந்த ஜல்லிக்கட்டு போட்டியை மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் தான் தடை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து அம்மாவின் அரசு மத்திய அரசை வலியுறுத்தி இழந்த ஜல்லிக்கட்டு உரிமையை பெற்று தந்தது. அதுமட்டுமல்ல ஒரு முதலமைச்சர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த வரலாற்றை எடப்பாடியார் உருவாக்கினார் .
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர்க்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை திமுக கொடுத்தனர் ஐந்து ஆண்டுகளாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
இன்றைக்கு எடப்பாடியார் 292 வாக்குறுதியை அளித்துள்ளார் குறிப்பாக ஜல்லிக்கட்டு காளையை பிடிக்கும் பொழுது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை எழுச்சியோடு நடத்துவதற்கு அரசின் சார்பில் மானியமாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
கடந்த அம்மாவின் ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் இல்லை .ஆனால் திமுக ஆட்சியில் ஆன்லைன் கொண்டு வந்து பல்வேறு முறைகேடு ஏற்பட்டுள்ளது .இதனை தொடர்ந்து எடப்பாடியார் தற்போது தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்படும் ஏற்கனவே இருந்த பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.
தற்போது வடக்கு தொகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதியை கொடுக்கிறேன் அதில் நீண்ட நாள் கோரிக்கையான ஜல்லிக்கட்டு போட்டியை வடக்கு தொகுதியில் ஆண்டுக்கு நான் இருமுறை நான் நடத்துவேன்.
அதேபோல மதுரை வடக்கு தொகுதியில் குப்பைகளை சரிவர அப்புறப்படுத்தாமல் குப்பையின் தொகுதியாக உள்ளது .நிச்சயம் நான் உங்கள் ஆசியுடன் வெற்றி பெற்று குப்பை இல்லாத தொகுதியாக மாற்றி காட்டுவேன் .அதேபோல மக்களின் கோரிக்கையான புதூர் காந்திபுரம் கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு தொகுதி தன்னிறைவு பெற்ற தொகுதியாக உருவாக்கிட உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
