மதுரை வடக்கு தொகுதியில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் அடுக்குமாடி வீடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்
மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் உறுதி
மதுரை
மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் தல்லாகுளம், முதலியார் தெரு, முத்தரையர் சங்கம், கரும்பாலை, மானகி,ரி மாநகராட்சி ஊழியர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார். அவருடன் நடிகர் கஞ்சா கருப்பு ,மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி கழக செயலாளர் அசோகன், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர் ,அலெக்ஸ், தனபால் மற்றும் பாஜக அமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்
டாக்டர் சரவணன் பேசியதாவது,
எடப்பாடியார் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,நகரப் பகுதிகளில் சொந்தமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு அம்மா இல்லம் திட்ட மூலம் அடுக்கு மாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் அவருடைய மகன்கள் ,மகள்கள் திருமணம் ஆகி தடிக் குடித்தனம் செய்கிற போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்துள்ளார் ஆகவே இந்த வடக்கு தொகுதியில்சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் அடுக்குமாடி வீடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்
தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் வரும் விலையில்லா அரிசியோடு ,
ஒரு கிலோ பருப்பு ,ஒரு கிலோ லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
நகர் பகுதியில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறிய வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் .ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து சொந்த ஆட்டோ இல்லாதவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க 75000 மானியமாக வழங்கப்படும்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் .
ஆதிதிராவிடர்களுக்கான கோவில் புதிதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகையை 2.50 லட்சத்திலிருந்து
5 லட்சம் ஆக உயர்த்தி வழங்கப்படும்
பட்டியலின மக்கள் விருப்பத்தின் பேரில் கிறிஸ்துவத்திற்க்கு மாறும்பொழுது ஏற்கனவே அவர்கள் பெற்று வந்த உரிமைகள் ,சலுகைகள் மறுக்கப்படாமல் வழங்கும் வகையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் உரிமைகளையும், சலுகைகளும் தொடர்ந்து தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
