மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை பிப் 08

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி வரவேற்புரையாற்றினார். மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

10-வது வட்ட திமுக பொறுப்பாளர் ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், புதூர் பகுதி செயலாளர் புண்ணிய மூர்த்தி, திமுக வட்டச் செயலாளர் வி.சி.மாதவன், திமுக 12-வது வட்டச் செயலாளர் மருது, திமுக 14-வது வட்டச் செயலாளர் வேலு, இளைஞர் அணி பகுதி செயலாளர் பாபு, 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அந்தோணியம்மாள் சவரிராயன் மற்றும் புதூர் பகுதி பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். தமிழாசிரியர்கள் தெளபீக் ராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வழங்க நூருல்லாஹ் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் முகமது செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *