தேனி மாவட்டம் திம்மரச நாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திம்மரச நாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


மேலும் வெற்றி பெற்ற மாணவி, மாணவிகளுக்கு பாராட்டும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கிய அரசு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் சத்தியசீலா தலைமை தாங்கினார் ஊர் நாட்டாமை ரெங்கராஜ் முன்னாள் ராணுவம் முன்னிலை வகித்தார்

சத்தியபிரபு ஆசிரியர் வரவேற்று பேசினார் பள்ளி மேலாண்மை குழு தலைவி அ. ஜெயசூர்யா சிறப்புரை ஆற்றினார் முன்னாள் மாணவர்கள் அ. அழகர்சாமி ஏ கே எக்ஸ்போர்ட் பெ. ரவிச்சந்திரன் பொம்மை கம்பெனி வி. அழகர்சாமி கன்சல்டிங் மேனேஜர் வார்டு மெம்பர் ஆதிலட்சுமி மற்றும் சத்துணவு பொறுப்பாளர் ராஜா தோழர் ராமசாமி போஸ்கவுண்டர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

வந்திருந்த அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது பள்ளிஆண்டு விழா பற்றி தலைமை ஆசிரியர் கூறும்போது தேர்தல் வருவதால் ஜூன் அல்லது ஜூலை மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

‍ நிகழ்ச்சியின் முடிவில் முன்னாள் மாணவரும் இன்னாள் ஆசிரியர் க. சக்திவேல் நன்றியுரை கூறினார்.

கலாம் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *