ஜெயா சீனிவாச பாண்டியராஜன் அறக்கட்டளை சார்பாக சான்றிதழ்களை கல்வி தந்தை ஸ்டார் குரு வழங்கினார்
மதுரை ஜன 07
சண்சரண் சமூகம் மற்றும் கல்வி நல அறக்கட்டளை மதுரை இலக்கிய பேரவை சார்பாக முனைவர் சண்முகத்திருக்குமரன் அவர்கள் எழுதிய 5-நூல்கள் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் சிவஞானம் அவர்கள் நூலை வெளியிட்டார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்டார் குரு பவுண்டேஷன் நிறுவனர் ஸ்டார் குரு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமித்துரை, தேவகி ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் ஜெயா சீனிவாசா பாண்டியராஜன் அறக்கட்டளை சார்பாக, பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற பாரதியார் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஜெயா சீனிவாச பாண்டியராஜன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜா முன்னிலையில், ஸ்டார் குரு பவுண்டேஷன் நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் வழங்கி மாணவ மாணவிகளை பாராட்டினார்.
உடன் அச்சிவி டெக் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தலைவர் ஜி.வனஜா, ஆன்மீக சொற்பொழிவாளர் மதுரை மஞ்சு ஆகியோர் உள்ளனர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
