மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர், திருவள்ளுவர் தெருவில் நாயுடு மெஸ் திறப்பு விழா…

மதுரை எஸ்.எஸ் காலனி நாவலர் நகர், திருவள்ளுவர் தெருவில் நாயுடு மெஸ் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாய் கிழவி திரைப்பட புகழ் பவுன்தாய் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு பாஜக பிரமுகர் ராஜ்குமார் தலைமை வகித்தார். திமுக வட்டக்கழக செயலாளர் கண்ணன் மற்றும் திரைப்பட விநியோஸ்தகர் ஏ எஸ் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மெஸ் உரிமையாளர்கள் பாஜக பொருளாதார பிரிவு மதுரை மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் தொழிலதிபர் கிஷோர்குமார், திருமதி யாமினி ஆகியோர் வரவேற்று பேசினர்.

இவ்விழாவில் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா மாநிலத்தலைவர் பிச்சைவேல், மற்றும் நிர்வாகிகள் முருகேசபாண்டி, முனைவர் ராமர், விவேகானந்தன், ராஜேஸ்வரி, உமாராணி, பாலமுருகன் மற்றும் பவுன்தாய் மகன் முத்துராமன் மற்றும் ஹரிகிருஷ்ணன்-தாரா, கார்த்திகேயராஜா-பத்மாவதி, பாலாஜி-ஐஸ்வர்யா, ராதா-கலாவதி, ஆறுமுகம்-காஞ்சனாமாலா, சீனிவாசன்-ஈஸ்வரி மற்றும் கருப்பையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *