மதுரை மாநகர் வடக்கு 2-ம் பகுதி செயலாளர் வி.கணேசன்
தலைமையில் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் விழா:
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கினார்
மதுரை, பிப் 09-
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வடக்கு 2-ஆம் பகுதி செயலாளர் வி.கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்.
மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 2- ம் பகுதி அ.தி.மு.க.சார்பில் பகுதி செயலாளர் வி.கணேசன் தலைமையில் அ.தி.மு.க. நிறுனவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பீ.பீ.குளம் பகுதியில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. வழங்கினார்.
பின்னர் அப்பகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்த அ.தி.மு.க.தேர்தல் வாக்குறுதி குறித்த துண்டு பிரசுரங்களை முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பொதுமக்களிடத்தில் வழங்கி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் முதல்வராக எடப்பாடியார் பதவியேற்றவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவார். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் எல்லாரும் ஆதரவு தந்து எடப்பாடியாருக்கு மாபெரும் வெற்றியை தர வேண்டும் என எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் கு.திரவியம், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச்செயலாளர் பேராசிரியர் உசிலை ஜெயபால், முன்னாள் மண்டல தலைவர் கே.ஜெயவேல், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர். செல்வகுமார், பகுதி செயலாளர் அண்ணாநகர் முருகன், மாணவரணி மாவட்ட அவைத்தலைவர் மார்க்கெட் மார்நாடு மற்றும் பகுதி தலைவர் எஸ்.முருகன், பிரதிநிதி முத்துகுமார், துணை செயலாளர் பாண்டிச்செல்வம், பாசறை பகுதி செயலாளர் தினேஷ்குமார், ஐ.டி.விங்க எஸ்.சுரேஷ், பகுதி பொருளாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டி, மகளிரணி ஜெயா, பேரவை செயலாளர் ரவி, மாணவரணி செல்வபாண்டி மற்றும் வட்டக்கழக செயலாளர்கள் 32-வடக்கு வட்ட செயலாளர் பீ.பீ.குளம் மகேந்திரன், 32 வது கிழக்கு வட்ட செயலாளர் எம்.ஜி.ஆர். ஹோட்டல் கண்ணன், 26 வது கிழக்கு வட்டக்கழக செயலாளர் வேலுமணி, 15-வது வடக்கு வட்டக்கழக செயலாளர் பாண்டித்துரை, 15-வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் எம்.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
