மதுரையில் பெட்கிராட் சார்பாக 34-ஆம் ஆண்டு உலக மகளிர் தின விழா
மதுரை மார்ச்
பெட்கிராட் சார்பாக 34 ஆவது ஆண்டு உலக மகளிர் தின விழா பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி தலைமையிலும் பொருளாளர் சாராள் ரூபி மற்றும் துணைத் தலைவர் சுசிலா குணசீலி ஆகியோரது முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். நிர்வாக இயக்குனர் சுப்புராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார்
தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் இணை இயக்குனர் சாந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்து பெண்கள் அதிகாரம் படைத்த மனம் உடையவர்கள் அதிகாரத்தை கொடுத்த மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் உள்ளார்.பெண்கள் பக்குவமான குணம் உடையவர்கள் என உலக மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார். மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் காந்திமதி பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும் விழிப்புடனும் தைரியமாகவும் செயல்பட பெண்கள் முன் வர வேண்டும் எனவும் பேசினார்கள்
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மதுரை மாவட்டம் அலுவலர்
கனிமொழி நான் முதல்வர் திட்டம் பற்றியும் சுயதொழில் முனைவோர் ஆவதின் நோக்கம்
பற்றியும் விளக்கிப் பேசி கம்ப்யூட்டர் டெலிகாலிங் பயிற்சி பெற்ற 70 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
யாதவா கல்லூரி உதவி பேராசிரியர்,பட்டிமன்ற பேச்சாளர் சத்தியதேவி அவர்கள் பெண்களின் பெருமையும் திறமையும் குறித்து வரலாற்று செய்திகளுடன் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
ஜி.எச்.சி.எல் பவுண்டேசன் சீனியர் சி எஸ்.ஆர் ஆபிசர் சுஜின் மதுரை மாவட்டத்தில் 10 கிராமங்களை தேர்வு செய்து கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து வருகின்றோம் எனவும் பெண்கள் சுயதொழில் செய்ய ஏதுவாக இலவச பயிற்சிகளையும் நடத்தி வருகின்றோம் என கூறினார்.
மதுரை மாவட்ட மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் பேபி மற்றும் மரியா ஆகியோர் பெண்களை வாழ்த்தி பேசினார்கள். இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் பெட்கிராட்டும் இணைந்து நடத்திய சுயதொழில் பயிற்சியான மாட்டு சாணத்தில் மதிப்பு கூட்டுப் பொருள் தயாரித்தல், சோப்பு, பினாயில் பாடிவாஷ் தயாரித்தல். சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை பெற்ற 150 பெண்களுக்கு இடிஜஜ திட்ட அலுவலர்கள் சரவணன், ரஞ்சித் குமார், ஆனந்த சேகர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
பெண்மையைப் போற்றுவோம்!
பெண்களை பாதுகாப்போம்!!
என்ற உறுதிமொழியுடன் விழா நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் நன்றி கூறினார்.
