பரவை ஊர்மெச்சிகுளத்தில் பயணிகள் நிழற்குடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
மதுரை மார்ச் 11
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் பால்பண்ணை காலனி, சங்கர் நகர், அண்ணாநகரில் மேற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணியை, மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக பரவை ஊர்மெச்சிகுளம் அருகே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பயணியர் நிழற்குடையை அவர் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு பரவை பேரூராட்சி தலைவர் கலாமீனாராஜா முன்னிலை வகித்தார். பரவை பேரூர் கழகச் செயலாளர் பரவை ராஜா வரவேற்று பேசினார்
இந்நிகழ்ச்சியில் ஜெயந்தி ராஜூ, அதிமுக நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, பா.குமார், திரவியம், வி.பி.ஆர். செல்வகுமார், மார்க்கெட் மார்நாடு மற்றும் பரவை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். பரவை பேரூராட்சியில் மக்களுக்காக பல்வேறு செயல் திட்டங்களை செயல்படுத்தி வரும், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களுக்கு பரவை கிராம பொதுமக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
