வெள்ளாளர் முன்னேற்ற கழகம், தென்னக மக்கள் இயக்கம் மற்றும் தென் மாவட்ட வ.உ.சி பேரவை இணைந்து நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

வெள்ளாளர் முன்னேற்ற கழகம், தென்னக மக்கள் இயக்கம் மற்றும் தென் மாவட்ட வ.உ.சி பேரவை இணைந்து நடத்திய மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள திருவாலவாயநல்லூர் பகுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவியும், தென்மண்டல அமைப்பாளருமான திருமதி அன்னலட்சுமி சகிலா கணேசன் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் கே.வி.ஹரிஹருன் பிள்ளை,
பொதுச்செயலாளர் வேளச்சேரி மாதவன்,
மாநில அமைப்பாளர் துபாய் மதன் பிள்ளை,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் புல்லட் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கே.வி ஐயப்பா, கார்த்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் புதிய நீதி கட்சியின் தென்மண்டல செயலாளர் வெங்கடாசலம், அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க மாநிலத் தலைவர் கனகவேல் பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் ராமச்சந்திரகுமார் தமிழ்வேல் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சரவணச்செல்வம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாபநாசம் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தலைவர் மா.வைரமுத்து, மதுரை மாவட்ட வழக்கறிஞர் சி.கார்த்தி, அலங்காநல்லூர் ஊர்சேரி சதீஷ், வ.உ.சி பேரவை சித்தாலங்குடி அன்னலட்சுமி பிரதர்ஸ் தலைவர் புலி, வ.உ.சி இளைஞர் பேரவை
டிவி நல்லூர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *