மதுரை சரவணா கிச்சன் சார்பில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனை துவக்கம்
மதுரை பிப் 11
அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில், ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி வழங்கி வந்த நிலையில், மாலை வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது.

நேற்று வியாழக்கிழமை சரவணா மருத்துவமனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை பிரியாணி விற்பனையை டெம்பிள்சிட்டி நிறுவனர் குமார் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட நடிகர்கள் சிஸர் மனோகர், கிங்காங், விஜயகனேஷ், சாரப்பாம்பு சுப்புராஜ், பாவா லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ், வழக்கறிஞர் குமாரதேசிகன், முனிச்சாலை சரவணன், எம்.எஸ்.கே மல்லன், சந்திரசேகர் கணேசன், ராமசுப்பு, செழியன், அஜீத்குமார், முத்து உள்பட அதிமுக நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
