பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனர்,பாலாஜி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனர்,பாலாஜி நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அன்னதானம்

மதுரை பிப்

பி.ஜி நாயுடு ஸ்வீட்ஸ் நிறுவனர், தொழிலதிபர் பாலாஜி நாயுடு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் சார்பாக மதுரையில் ஏழை,எளியவர்களுக்கு அன்னதானம், இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை திருநகர் பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பெத்தானியாபுரம் நாயுடு சங்க தலைவரும், தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக ஒருங்கிணைப்பாளருமான எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமையில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை நாயக்கர் வம்சம் அமைப்பின் பொருளாளர் மன்னர் கல்லூரி ரங்கராஜ், வேளீர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் நாயுடு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *