மதுரையில் மாணவரணி சார்பாக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்

மதுரையில் மாணவரணி சார்பாக ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்

மதுரை ஆகஸ்ட் 02

மக்களை காப்போம்..! தமிழகத்தை மீட்போம்..! பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மதுரை மாநகர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள அதிமுக பொதுச்செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து, மாணவரணி மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.பார்த்திபன் தலைமையிலும், மாணவரணி மாநில இணைச் செயலாளர் பா.குமார் முன்னிலையிலும் செல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இக்கூட்டத்தில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, பேராசிரியர் ஜெயபால், கவுன்சிலர் மாயத்தேவன், மார்க்கெட் மார்நாடு, ஐ.டி.விங் கவிச்செல்வம், திடீர்நகர் பாலா, ஐ.டி.விங் அப்துல்காதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *