டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் 200 டிரோன்களின் விளக்கொளியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் வாசகங்களை ஒளிரச் செய்த டிரோன் ஷோ
திருநெல்வேலி ஆகஸ்ட் 03
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் மேற்கொண்டுள்ள மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! எனும் பிரச்சாரப் பயணம் திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பணகுடியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் இசக்கி சுப்பையா, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி, அதிமுக மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு டாக்டர் பா.சரவணன் அவர்கள் ஏற்பாட்டில் 200 டிரோன்கள் வானில் பறந்து வண்ண விளக்கொளியில் எடப்பாடியாரை வரவேற்கும் வாசகங்களை ஒளிரச் செய்த டிரோன் ஷோ பிரமாண்டமாக நடைபெற்றது. இதை அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
