தமிழ்நாடு பூஜாரிகள் பேரமைப்பு விஸ்வ இந்து பரிஷத் சார்பாக ஆலோசனை கூட்டம்
மதுரை மார்ச் 04
தமிழ்நாடு பூஜாரிகள் பேரமைப்பு விஸ்வ இந்து பரிஷத் சார்பாக வரும் மார்ச் 11-ஆம் தேதி திருவண்ணாமலையில் பூசாரிகள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளதையொட்டி மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள சமணர் மலை பகுதியில் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் செல்லையா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் திண்டுக்கல் உதயகுமார் சிவாச்சாரியார், சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பூசாரி மற்றும் மாவட்ட பொருளாளர் சிவமுருகன் பூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பரங்குன்றம் ஒன்றிய தலைவர் விஜிபாபு வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் செல்லப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் பரமாண்டி,சோனை, திருமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சி.செல்லையா,கண்ணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் கார்த்திக்செல்வம், மாநகர் செயலாளர் சிவனாண்டி மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாநகர் தலைவர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
