மதுரைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு டாக்டர் பா சரவணன் தலைமையில் உற்சாக வரவேற்பு

மதுரைக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

மதுரை மார்ச் 01

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றதுடன், நான்கு வழிச்சாலையில் சிந்தாமணி சிக்னல் அருகில் உள்ள ஜி.ஆர்.டி ஹோட்டல் முன்பு டாக்டர் பா.சரவணன் அவர்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்க, வரவேற்பு பதாகைகள் ஏந்தியும், மலர்கள் தூவியும் எடப்பாடியாருக்கு வரவேற்பு வழங்கினார்கள். இந்நிகழ்வில் கழக நிர்வாகிகளும் தொண்ட்ர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *