மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் அவர்களை சந்தித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் மூர்த்தி அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார்.
அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது :-
மதுரை மாவட்டம் செக்கானுாரணி சார்பதிவாளர் பத்திரப்பதிவு துறை அரசு ஆணை இல்லாமல் விவசாயிகளின் விலை நிலங்களை சதுரடியாகத்தான் பதிவோம் என்று சட்டத்தை மீறுகிறார். அதனால் விவசாயிகள் பாகப்பிரிவினையோ பொதுமக்கள் பாகப்பிரிவினையோ பத்திரம் பதியமுடியவில்லை அரசு ஆணை இல்லாமல் அரசு வழிகாட்டி மதிப்பைவிட 30 சதவீதம் கூடுதலாக உயர்த்தி பதிவு செய்கிறார்கள் இந்த நிலை தொடர்ந்தால் சிறு குறு விவசாயிகள் நிலங்களாக இல்லாமல் வீட்டு மாறிவிடும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி விடுகிறார்கள் நாங்கள் எங்கள் சங்கத்திலிருந்து செக்கானுாரணி சார்பதிவாளர் அவர்களுக்கு சங்கத்தின் சார்பாகவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் பலமுறை கடிதங்கள் கொடுத்து எந்தவிதமான பதிலும் தர மறுக்கிறார்கள். எப்போதும் போல் அரசு ஆணை இல்லாமல் பதிந்து வருகிறார்கள் ஆகவே தாங்கள் விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன். என அந்த மனுவில் கூறியுள்ளார். பின்னர் செய்தியார்களை சந்தித்து அவர் கூறுகையில் செக்கானூரணி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சதுர அடியாக தான் பதிவும் என்று சார் பதிவாளர் கூறி வருவதால் விவசாயிகள் பெருகும் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பத்திர எழுத்தர்கள் இச்செயலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் செயல்படும் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக செக்கானூரணி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் மூலமாக புகார் அனுப்பியுள்ளோம். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் சார்பதிவாளர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். என கூறினார்.
இந்நிகழ்வின் போது அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் திருமங்கலம் தலைவர் காசிமாயன் உசிலம்பட்டி தலைவர் காசி செக்கானூரணி தலைவர் விருமாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
