மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அந்தநேரியில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்களை கெளரவித்த டாக்டர் சரவணன்

மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அந்தநேரியில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்களை கெளரவித்த டாக்டர் சரவணன்

மதுரை பிப்

மதுரை என்றாலே வீரம் தான். புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரம் மிக்க காளையர்கள் மதுரையில் தான் ஏராளமானோர் உள்ளனர். அதுபோல் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே மதுரையில் உள்ளது. அவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை தன் வீட்டு பிள்ளைகள் போல் பாசத்துடன் வளர்க்கின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகளை தன் இமை போல் காத்து பயிற்சி அளித்து ஜல்லிக்கட்டு போட்டியில் களம் இறக்குவர். தான் ஆசையாய் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை யாருக்கும் பிடிபடாமல் பரிசுகளை அள்ளி வரும் போது அவர்களுக்குள் பெரும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளையை தங்களது ஊருக்குள் ஊர்வலமாக கொண்டு செல்வர். இந்த வகையில் தமிழர் பாரம்பரியத்தை கட்டி காக்கும் விதமாக ஜல்லிக்கட்டு காளைகளை வர வழக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் வீரத்தை வெளிக்காட்டுவதற்காக ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களையும் கௌரவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் அறிவித்துள்ள நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்களையும் கெளரவிக்கும் விழா மதுரை மாவட்டம் மூன்று மாவடி சூர்யா நகர் அருகே உள்ள அந்தநேரி ஜவகர்லால் நகரில் நடைபெற்றது.

இவ்விழாவில் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் அவர்கள்,வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, பட்டு வேட்டி சேலை மற்றும் 5000/- ரூபாய் ரொக்கம் அடங்கிய பரிசுகளையும், மாடு பிடி வீரர்களுக்கு பட்டு வேட்டியுடன் 5000/- ரூபாய் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ், தலைமை கழக பேச்சாளர் எம்.எஸ்.கே.மல்லன், முனிச்சாலை சரவணன், குமார், கண்ணன் வழக்கறிஞர்கள் குமரதேசிகன் மற்றும் ராமசுப்பிரமணியன்,செழியன், ராமமூர்த்தி, முத்தானந்தம், அஜித்குமார், சண்முகம், நேருநகர் கணேசன் ரஞ்சித் முகமது, புரட்சிக்கண்ணன், மாரிச்செல்வம், பிரேம்குமார், விமல், செல்வேந்திரன் உள்பட கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *