மஸ்ஜிதே மதினா டிரஸ்ட் மற்றும் சூர்யா டிரஸ்ட் ஏற்பாட்டில் மாபெரும் மருத்துவ முகாமை டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார்
மதுரை பிப்
மஸ்ஜிதே மதினா டிரஸ்ட் மற்றும் மதுரை சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சூர்யா டிரஸ்ட் ஏற்பாட்டில் மதுரை மாநகராட்சி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 14-வது வார்டு கோ.புதூர் மாரியம்மன் கோயில் தெருவில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமினை அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா.சரவணன் அவர்கள் துவக்கி வைத்து மக்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கினார்.இந்த மருத்துவ முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மஜ்ஜிதே மதினா டிரஸ்ட் நிர்வாகிகள் அலாவூதீன், லியாகத் அலி, ஜாஹிர் உசேன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அபுதாகீர், நாகராஜ் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
