தியாக திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக சிறப்பு தொழுகை..!
மதுரை மே
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக அரசரடி யூ.சி.பள்ளி விளையாட்டு திடலில், மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்டச் செயலாளர் அபூபக்கர் ஹர்ஷத் அல் புகாரி தொழுகையினை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் யு.அப்துல்ஹமீது மாவட்டத் துணைச் செயலாளர் முகைதீன்பாபு, மகபூப்பாளையம் கிளைத் தலைவர் ஹக்கீம் ஷெரீப் மற்றும் மாவட்ட, துணை, கிளை நிர்வாகிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கத்திற்காகவும் உலக அமைதிக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும் பிரார்த்தனை செய்தனர்.
