ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன் சார்பாக, மதுரை ஏழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு பேரணியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை சமூகத்திற்கு எடுத்துரைத்தனர்.
ஸ்டார் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி. குருசாமி அவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து, மாணவர்கள் முன்னிலையில் எழுச்சியூட்டும் உரையாற்றினார். அவரது உரை மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் நல்ல எதிர்காலத்திற்கான உறுதியையும் விதைத்தது.

மேலும், 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேர்விற்கு தேவையான ஸ்கேல், பென்சில், ஷார்ப்னர், ரப்பர், நோட்டு மற்றும் இங்க் பேனா ஆகியவற்றை வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.
பரிசுகளை பெற்ற மாணவர்கள், “குருசாமி சார் வழங்கிய பேனாவிலேயே தேர்வு எழுதுவோம்; சிறந்த மதிப்பெண்கள் பெற்று அவரை பெருமைப்படுத்துவோம்” என்று உறுதியளித்தனர்.
கலாம் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்..
