விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாக்டர் பா.சரவணன் அன்னதானம் வழங்கினார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிமுக மருத்துவர் அணி மாநில இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் அன்னதானம் வழங்கினார்

மதுரை மத்திய தொகுதி, நகைக்கடை பஜார் அருகே உள்ள கான்சா மேட்டுத்தெருவில் ஓம்சக்தி விநாயகர் ஆலயம் 17 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பா.சரவணன் கலந்து கொண்டு பிரம்மாண்ட விநாயகர் சிலைக்கு தீபாராதனை செய்து வழிபட்டார்.

பின்னர் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு கோவில் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, சதீஸ்வரன், பிரபு, அருண் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *