மதுரை பாத்திமா நகரில் ஆழ்குழாய் கிணறு தொட்டியை கவுன்சிலர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை பாத்திமா நகரில் ஆழ்குழாய் கிணறு தொட்டியை கவுன்சிலர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை செப் 09

மதுரை மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் பல்வேறு குறைகளை உடனடியாக சரி செய்து கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பாத்திமா நகர் பகுதியில் தண்ணீருக்காக தாங்கள் சிரமப்படுவதால் ஆழ்குழாய் கிணறு தொட்டி (சின்டெக்ஸ் தொட்டி) அமைத்து தருமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அதை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாமன்ற உறுப்பினர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 04.98-லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு தொட்டி அமைத்து கொடுத்து மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தார்.

தங்களின் குறைகளை உடனடியாக சரி செய்து கொடுத்த கவுன்சிலர் பி.ஆர்.சி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *