தி மதுரை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் 62-ஆம் ஆண்டு பேரவை கூட்டம்

மதுரை செப்

தி மதுரை மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக 62-ஆம் ஆண்டு பேரவை கூட்டம் மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள தருமை ஆதீனம் ஸ்ரீ சொக்கநாதர் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் இன்ஜினியர் பழனிச்சாமி தலைமையிலும், புரவலர் சுப்பையா முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திருஞானசம்பந்தம் மற்றும் விக்ரம் மருத்துவமனை தலைவர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் மறைந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியை சங்கத்தின் பொதுச்செயலாளர் இன்ஜினியர் எஸ்.ஆர் ரங்கன், பொருளாளர் கே.மனோகரன், திட்ட பொருளாளர் எஸ்.சங்கர்லால் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *