மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை கண்டித்து, நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…!

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனை கண்டித்து, நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை செப்

மதுரையில் டி.டி.வி தினகரனை கண்டித்து நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் நடைபெற்ற மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்… எழுச்சி பயணத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக்கு வந்த பின் சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டப்பட்டால், தென்மாவட்டத்தில் கலவரம் ஏற்படும் என கருத்து தெரிவித்தார்.

இதனை கண்டித்து
நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் ஆணைக்கிணங்க,
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு டி.டி.வி.தினகரனை கண்டித்து, மாநிலச் செயலாளர் சுமன் தேவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் டி.டி.வி தினகரனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதில்
சுதந்திர புலிகள் இயக்கம் நிறுவனர் தலைவர் தத்தனேரி கார்த்திக், நேதாஜி சுபாஷ் சேனை மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தூர் மகேஷ் தேவர்,
மாநில இளைஞரணி இணைச்செயலாளர் மாயன்தேவர்,
இளைஞரணி மாவட்ட செயலாளர் கராத்தே பாலசுப்ரமணியன்,
பாசறை மாவட்ட பொறுப்பாளர் பரவை செல்வபாண்டியன், இளைஞரணி மாவட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன்,
புறநகர் மாவட்ட தொண்டரணி செயலாளர் பால்பாண்டி,
புறநகர் மாவட்ட தொண்டரணி செயலாளர் சின்ன பால்பாண்டி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் சாலமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *