திருப்பூர்.
திருப்பூரில் டாஸ்மாக் கடையில் காலிபாட்டில் டெண்டர் எடுத்த திமுகவினருக்கும் ,பார் உரிமையாளருக்கும் கடும் வாக்குவாதம் .
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் உள்ள மதுபானகூடத்தில்
திமுக கொடி கட்டிய ஜீப்பில் வந்த காலி பாட்டில் டெண்டர்தாரர், பார் உரிமையாளர்களுக்கும் காலி பாட்டில் எடுப்பது தொடர்பாக கடும் வாக்குவாதம்.
வருகிற 1-ம் தேதி முதல் காலிபாட்டில் எடுப்பதற்கு ஆர்டர் உள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே எவ்வாறு எடுக்கலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
இங்கு கூட்டம் கூட வேண்டாம் என கூறி இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை – பரபரப்பு.
திருப்பூரில் செயல்படும் 225 டாஸ்மார்க் மதுபான கடைகளிலும் காலி பாட்டிலை கொடுத்து பத்து ரூபாய் திரும்பப்பெறும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே அதிகபட்ச விற்பனை விலையில் பாட்டிலுக்கான விலையும் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது மது குடிப்போரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில்
காலி பாட்டில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் தினமும் அனைத்து மதுபானக்கூடங்களுக்கும் சென்று காலிபாட்டில்களை சேகரித்து வருவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி டாஸ்மாக் மதுபான கூடத்தின் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறு புழுவப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் திரண்டனர்,
அங்கு காலி பாட்டில் டெண்டர் எடுத்த திமுக கொடி கட்டிய காரில் வந்த திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும்
வருகிற டிசம்பர் 1ஆம் தேதி முதல் டெண்டர் காலி பாட்டில் எடுப்பதற்கு உள்ள நிலையில்எப்படி அதற்கு முன்னர் எடுக்கலாம் என கூறி பார் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
இதனால் தகவல் அறிந்த போலீசார் சிறு பூலுவபட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை மது கூடத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அங்கு பரபரப்பான நிலை காணப்படுகிறது,
இதுகுறித்து மதுபான கூட உரிமையாளர்கள் தெரிவிக்கையில்,
டாஸ்மாக் மேலாளரிடம் காளி பாட்டில் தொடர்பாக பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும்,இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்ட நிலையில் திடீரென காலி பாட்டில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மதுபான கூடத்தில் காலி மது பாட்டில்களை சேகரித்து வரும் செயலில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினர்.
ஒரு கட்டத்தில் பிரச்சனை அதிகரிக்க வார் உரிமையாளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால் காரில் கட்டிய திமுக கொடியை லாவகமாக கழட்டினர்,
ஏற்கனவே தமிழகத்தில்
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டிலுக்கு ரூ.10 வழங்கும் திட்டத்தால், ஊழியர்கள் பற்றாக்குறை , பாட்டில்களை சேமிக்க போதுமான இடம் இல்லாதது, மற்றும் நோய் தொற்று அபாயம் போன்ற பிரச்சனைகளால் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
