சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வள்ளல் பொன்.பாண்டித்துரைத்தேவர் 114-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அவரது சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆணைக்கினங்க மாநிலச் செயலாளர் எம்.சுமன்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநில வர்த்தக அணி செயலாளர் செந்தூர் மகேஷ், மதுரை மாவட்ட தலைவர் பி.எம்.ராஜாமாறன், இளைஞரணி செயலாளர் கராத்தே பாலா,மேற்கு மாவட்ட செயலாளர் செல்வபாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
