தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திருப்பூரில் உள்ள ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் திருப்பூர் வடக்கு தெற்கு காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் பி ஆர் குழந்தைவேல் தலைமை தாங்கினார் இதில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் :-

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகள் அல்லாமல் துர்நாற்றம் வீசுவதாகவும் தார் சாலைகள் மாநகர் முழுவதும் தரமான சாலை இல்லை எனவும் குடிதண்ணீர் சரியாக வரவில்லை எனவும் சரமாரி குற்றச்சாட்டை முன் வைத்தார் மேலும் தேமுதிக துவங்கிய முதல் மாநாடு மதுரை மாநகர் எப்படி குலுங்கியோதோ அதேபோல் கடலூரில் நடைபெறும் 2.0 மாநாடு பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க இருப்பதாகவும்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் 20 ஆண்டு நினைவு செய்து 21 வது ஆண்டு துவக்க விழா மாநாடு மாபெரும் வெற்றி பெற ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார் திருப்பூர் என்றாலே அது தேமுதிகவின் கோட்டையாகவே எப்போதும் இருப்பதாக தெரிவித்தார் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேமுதிகவினர். நிகழ்ச்சி நிறைவு வரை இருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்தார் நிகழ்ச்சியின் முன்னதாக அவருக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை அசைவ உணவு வழங்கப்பட்டது பின்பு நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இந்த நிகழ்வில் கழகப் பொருளாளர் எல் கே சுதீஷ். மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ். மேற்கு மண்டல தேர்தல் துணை பொறுப்பாளர் கணேசன் திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முருகராஜ்.கோவை தெற்கு மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆனந்த். உள்ளிட்ட மாவட்ட மாநகர பகுதி ஒன்றிய நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்…
