மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா, கரிசல்பட்டியில் அகத்தியர் அன்னதான
அறக்கட்டளை மற்றும் ஈடன் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பல் மருத்துவ முகாம் அறக்கட்டளை நிறுவனர் பா.முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு அறக்கட்டளை செயலாளர் சகுந்தலா தேவி, பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈடன் பல் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

இம்முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், சி.எஸ்.ஆர். சின்னவெள்ளை, சமூக ஆர்வலர்கள் பன்னீர்செல்வம், போஸ், சொக்கர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விளம்பரத்திற்கான ஏற்பாடுகளை யோகராஜ் செய்திருந்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் நன்றியுரை கூறினர்.
கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.
