சென்னை இரண்டாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நிதியை பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடியார்
மதுரை,கோவை மெட்ரோ ரயில் பிரச்சனைக்கு ஸ்டாலின் நிர்வாக சீர்கேடு தான் காரணம்
மதுரை மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின் மதுரை மாநகராட்சியின் ஊழல்,அசுத்தமான பட்டியிலில் முதலிடம் இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை ?
கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கடும் குற்றச்சாட்டு
மதுரை நவ 24
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போனதற்கு ஸ்டாலின் திமுக அரசு தான் காரணம், இது குறித்து கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் விரிவான அறிக்கையை நாட்டு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
மதுரையில் 32 கிலோமீட்டர் அளவில் ஒத்தக்கடை,திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11,368 கோடியும் ,அதே போல கோவையில் 34.8 கிலோ மீட்டருக்கு 10,740கோடியும் திட்டமிடப்பட்டது.
குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசுக்கு தமிழக அரசு மெட்ரோ ரயில் குறித்து அறிக்கை கொடுத்தது .அதற்கு மத்திய அரசு கூடுதல் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியது. இதனை தொடர்ந்து ஒரு ஆண்டில் கழித்து கால தாமதமாக 2024 ஆண்டில் தமிழக அரசு மீண்டும் அனுப்பியது. அதில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தான் அனுப்பப்பட்டுள்ளது அதன்படி மதுரை மாவட்டத்தில் 15 லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மத்திய அரசு தற்போது சில விளக்கங்கள் கேட்டுள்ளது.
இதில் 2017 மெட்ரோ ரயிலில் திட்ட விளக்கங்கள் படி மக்கள் தொகை 20 லட்சம் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .மேலும் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள விளக்கத்தில் மக்களின் வழக்கமான போக்குவரத்திற்கும் மெட்ரோ ரயிலுக்கு மாறும் நேரம் வேறுபாடு என பல்வேறு விளக்கங்களை கேட்டுள்ளது. தற்போது ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழகத்தை மட்டும் புறக்கணித்துவிட்டு மற்ற மாநிலங்களில் அறிவித்ததாக கூறி மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் .
இது மற்ற மாநிலங்களில் 2022 கணக்குப்படி மின்சார வாரிய பில் இணைப்பு உள்ளிட்ட மக்கள் வாக்காளர்கள் சரியான தரவுகளை கொடுத்துள்ளார்கள் .ஆனால் மதுரையில் 25 லட்சம் மக்கள் தொகை உள்ளனர் ஆனால் 15 லட்சம் என்று கணக்கீடு செய்து அறிவித்து மதுரை மக்களை ஸ்டாலின் வஞ்சித்து விட்டார்.
மதுரை மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின் மதுரை மாநகராட்சியின் வரலாறு காணாத அளவில் ஊழல், எடப்பாடியார் ஆட்சித் தூய்மையான நகரமாக இருந்த மதுரையை இன்றைக்கு இந்தியாவிலே அசுத்தமான பட்டியிலில் முதலிடம் இதற்கு இதுவரை ஏன் கவனம் செலுத்தவில்லை ? பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த மதுரைக்கு மெட்ரோ ரயில் செயல்பயன்பாட்டிற்கு வராதிற்கு காரணம் திமுக அரசின் மோசமான நிர்வாகம் சீர்கேடு தான் காரணமே தவிர? மத்திய அரசு காரணம் இல்லை என மதுரை மக்களுக்கு நன்கு தெரிந்துவிட்டது.
சென்னை இரண்டாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதன் மூலம் 63,346 கோடி நிதியை பெற்றுக் கொடுத்தவர் எடப்பாடியார்.தற்போது கூட மதுரை ,கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்க்காக கோவைக்கு வந்த பாரத பிரதமரிடம் எடப்பாடியார் கோரிக்கை வைத்துள்ளார் .2026 தேர்தலில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவார் அப்போது மதுரை , கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவார் என கூறினார்.
