தீபாவளியை முன்னிட்டு மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி செயலாளர் வி.கணேசன் புத்தாடைகள் வழங்கினார்
மதுரை அக்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 2-ம் பகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேஷ்டி, சட்டைகள்,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பகுதி கழக செயலாளர் வி.கணேசன் வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத்தலைவர் ஆர்.அண்ணாத்துரை கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட வடக்கு 2-ம் பகுதி பகுதி செயலாளர் வி.கணேசன் பேசியதாவது-
நமது வடக்கு 2-ம் பகுதி நிர்வாகிகள், தொண்டர்க ளுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. 2026 ஆம் ஆண்டு மே மாதம் எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த முடிவினை மக்கள் ஏற்கனவே எடுத்துவிட்டார்கள். ஆகவே நமது வடக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் யாராக இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு தீயாக வேலை பார்த்து மதுரை மாநகரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.அதற்கு நீங்கள் இப்போதிருந்தே உற்சாகமாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.முருகன், எஸ்.ரவி, முத்துக்குமார். பாண்டிச்செல்வம், எம்.தினேஷ்குமார் சுந்தரபாண்டி, வட்டக் கழக செயலாளர்கள் பால்பாண்டி, வேல்மணி, பீ.பீ.குளம் மகேந்தின், பாண்டித்துரை, எம்.ஜி.ஆர்,ஹோட்டல் கண்ணன், என்.சிவா மற்றும் தொண்டர்கள், மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
