தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் கோரிக்கை மனு எதிரொலி…!மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது..

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் கோரிக்கை மனு எதிரொலி…!

மதுரை மேற்கு தாலுகா அலுவலகத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது..

மதுரை ஆகஸ்ட்

மதுரை விராட்டிபத்து பகுதியில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வந்தது.

இச்செயல்களை தடுக்கும் விதமாக தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் சார்பாக சி.சி.டி.வி கேமரா பொருத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தற்பொழுது மேற்கு தாலுகா அலுவலகத்தில் 5 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அவர்களுக்கு தேசிய மனித உரிமைகள் சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் மாநிலத் தலைவர் பிச்சைவேல் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநில தலைவர் முனைவர் பிச்சைவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது; எங்களது அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி அவர்களின் ஆலோசனைப்படி, மதுரை மேற்கு தாலுகாவில் பொதுமக்கள் நலன் கருதி சிசிடிவி கேமரா பொருத்த மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கடந்த மே-26 அன்று கோரிக்கை மனு அளித்தோம். மனுவை பரிசீலனை செய்த ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தில் ஆக -25ல் ஐந்து சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தார்.

அதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு எங்களது அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம், மேலும் மேற்கு தாலுகா வட்டாட்சியர் செந்தாமரை வள்ளி அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது நிர்வாகிகள் முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆர்.ராமன், வழக்கறிஞர் முருகன் மற்றும் முருகேசபாண்டி, பழனிவேல், முருகன், ஹரிசுதன், சரவணன், ராஜலட்சுமி, விவேகானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *